தேவாரத்தில்: பன்றிக்காய்ச்சலுக்கு ஆசிரியை பலி? - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி


தேவாரத்தில்: பன்றிக்காய்ச்சலுக்கு ஆசிரியை பலி? - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 11 Nov 2018 10:30 PM GMT (Updated: 11 Nov 2018 4:52 PM GMT)

தேவாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில் ஆசிரியை ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். மற்ற 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேவாரம்,


தேனி மாவட்டம் தேவாரம் நாடார் வடக்கு தெருவை சேர்ந்தவர் மோகன். முன் னாள் ராணுவவீரர். அந்த பகுதியில் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயா(வயது 43). இவர் அங்குள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியை யாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு யுவன்பிரசன்னா (19) என்ற மகனும், சஞ்சனா(14) என்ற மகளும் உள் ளனர். யுவன்பிரசன்னா திண்டுக்கல்லில் உள்ள என்ஜீனியரிங் கல்லூரியிலும், சஞ்சனா தேனியில் உள்ள பள்ளியிலும் படித்து வரு கிறார்கள். ஜெயாவின் சகோ தரி நிறைமதி (33) தேனியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களாக ஆசிரியை ஜெயா, மகன் யுவன்பிரசன்னா, மகள் சஞ்சனா, சகோதரி நிறைமதி, உறவினர் யாசிகா (13) ஆகியோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

இதில் ஜெயா மதுரையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். மற்ற 4 பேரும் தேவாரம் அரசு ஆரம்ப சுகா தாரநிலையத்தில் சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர் கள் 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆசிரியை ஜெயா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்து விட்டார். ஆசிரியை ஜெயா பன்றிக்காய்ச்சலால் பாதிக் கப்பட்டு இருந்ததாக கூறப் படுகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டு அதில் ஒருவர் இறந் தது தேவாரம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, இறந்த ஆசிரியை ஜெயா பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் இறந்துள்ளாரா? என்பது குறித்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் மருத்துவ அறிக்கை கேட்டுள்ளோம். இறந்த ஜெயாவின் மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருக்க கூடுமா? என்பது குறித்து மருத்துவ பரி சோத னைக்கு பின்பு தான் தெரியவரும் என்றார்.

Next Story