எருமப்பட்டி, பரமத்தியில் மூளை காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி


எருமப்பட்டி, பரமத்தியில் மூளை காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி
x
தினத்தந்தி 12 Nov 2018 3:45 AM IST (Updated: 12 Nov 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி, பரமத்தியில் மூளை காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

பரமத்திவேலூர்,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின் சார்பில் எருமப்பட்டி வட்டார வள மையத்தில் மூளை காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) நந்தினி தொடங்கி வைத்தார். இதில் பள்ளி ஆயத்த பயிற்சி மைய மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர், வீட்டு வழிக்கல்வி பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர், பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர், மாற்றுத்திறனாளி அல்லாத முதல் வகுப்பு மாணவர்களின் பெற்றோர், அங்கன்வாடி மேற்பார்வையாளர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி ஆயத்த மைய ஆசிரியர், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் மூளை காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு, நோய் பரவுதல் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் மாற்றுத்திறன் குழந்தைகள் பிறக்கும் முன் அதை தடுப்பதற்கான விழிப்புணர்வு, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான தொழிற்கல்வி ஆகியவை குறித்து விரிவாக எடுத்து கூறப்பட்டது. இந்த பயிற்சியை மாவட்ட திட்ட அலுவலர் குமார் பார்வையிட்டார். பயிற்சியை வட்டார கல்வி ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை நன்றி கூறினார்.

இதேபோல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பரமத்தி வட்டார வள மையத்திற்குட்பட்ட பள்ளி ஆயத்த முகாம் என்ற பெயரில் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் பெற்றோருக்கு மூளை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு பரமத்தி வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி, ஒருங்கிணைப்பாளர் பஞ்சவர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூளை காய்ச்சல் பரவும் விதம் அதனை தடுக்கும் வழிமுறைகள், மூளை காய்ச்சல் பரவுவதன் மூலம் ஏற்படும் மனவளர்ச்சி குறைபாடுகள் ஆகியவை குறித்து, நல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் கவுரி, டாக்டர் பரணிதரன் ஆகியோர் விளக்கி கூறினர். இந்த பயிற்சியை பரமத்தி வட்டார கல்வி அலுவலர் அருள்புரிதன் மேற்பார்வையிட்டார்.

Next Story