டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு: மாவட்டம் முழுவதும் 22 ஆயிரத்து 234 பேர் எழுதினர்


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு: மாவட்டம் முழுவதும் 22 ஆயிரத்து 234 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 11 Nov 2018 10:15 PM GMT (Updated: 11 Nov 2018 7:09 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை நெல்லை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 234 பேர் எழுதினர்.

நெல்லை, 

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை நெல்லை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 234 பேர் எழுதினர்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. இந்த தேர்வு நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, சங்கரன்கோவில், தென்காசி, ராதாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 98 கல்வி நிலையங்களில் தேர்வு நடந்தது.

இந்த தேர்வுக்கு நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 29 ஆயிரத்து 683 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் தேர்வில் 22 ஆயிரத்து 234 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 7 ஆயிரத்து 449 பேர் கலந்து கொள்ளவில்லை. இது 74.90 சதவீதம் ஆகும்.

கலெக்டர் ஆய்வு

இந்த தேர்வை கண்காணிக்க உதவி கலெக்டர் தலைமையில் 12 பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவில் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் தேர்வு மையங்களை கண்காணித்தனர்.

பாளையங்கோட்டை கிறிஸ்து ராஜா மேல்நிலைப்பள்ளி, வி.எம்.சத்திரம் ரோஸ்மேரி மேல்நிலைப்பள்ளி, ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளிகளில் நடந்த தேர்வை, நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வீடியோ கேமரா மூலம் தேர்வு கண்காணிக்கப்பட்டது. தடையில்லா மின்சாரம், பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனைத்து மையங்களுக்கும் அருகில் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story