தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என பரமக்குடியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தார்.
பரமக்குடி.
பரமக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “சர்க்கார் படப்பிரச்சினை முடிந்துவிட்டது. இனி அதனை பெரிதுபடுத்த வேண்டாம். இதுகுறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவாக எடுத்து கூறியுள்ளார். திரைப்பட துறையினரும், நாங்களும் எவ்வித பிரச்சினையும் இன்றி சுமுகமாக இருக்க வேண்டும். பரமக்குடி உள்பட 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. அ.தி.மு.க. அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகளை பெறுவோம்” என்றார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வின்சென்ட் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.