பள்ளி நேரத்தில் இயக்கப்படும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்


பள்ளி நேரத்தில் இயக்கப்படும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 11 Nov 2018 10:30 PM GMT (Updated: 11 Nov 2018 8:12 PM GMT)

பள்ளி நேரத்தில் இயக்கப்படும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிமெண்டு ஆலை பிரதிநிதிகள், டிப்பர் லாரி உரிமையாளர்கள், டிரைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

டிப்பர் லாரிகள் டிரிப் கணக்கில் ஓட்டுவதால் டிரைவர்கள் வேகமாக ஓட்டி செல்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றது. இதனை கவனத்தில் கொண்டு ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ- மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் நேரமும் இயக்கப்படும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து விபத்தில்லாமல் லாரிகளை இயக்க உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story