பெங்களூருவில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தலைமறைவான வக்கீலுக்கு போலீஸ் வலைவீச்சு


பெங்களூருவில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தலைமறைவான வக்கீலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Nov 2018 4:00 AM IST (Updated: 12 Nov 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவான வக்கீலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு, 

பெங்களூருவில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவான வக்கீலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பாலியல் தொல்லை

பெங்களூரு கோரமங்களாவில் உறவினர் வீட்டில் 14 வயது சிறுமி வசித்து வந்தாள். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தாள். இந்த நிலையில் அந்த சிறுமி குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த வக்கீல் கிரீஷ் வீட்டில் யாரும் இல்லாமல் இருப்பதை அறிந்து குளியலறைக்கு சென்றுள்ளாா்.

அங்கு வைத்து கிரீஷ், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறி சிறுமி கதறி அழுது இருக்கிறாள். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இதுபற்றி கோரமங்களா போலீஸ் நிலையத்தில் கிரிஷ் மீது புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் கோரமங்களா போலீசார், கிரீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

வலைவீச்சு

மேலும் இதுகுறித்து கிரீஷிடம் விசாரணை நடத்த போலீசார் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

பின்னர் அவரைத்தேடி ராமமூர்த்திநகரில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. அப்போது தான் அவர் தலைமறைவாகி விட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக உள்ள வக்கீல் கிரீசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story