கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் நான் முதல்-மந்திரி ஆவேன் எடியூரப்பா சொல்கிறார்


கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் நான் முதல்-மந்திரி ஆவேன் எடியூரப்பா சொல்கிறார்
x
தினத்தந்தி 12 Nov 2018 4:00 AM IST (Updated: 12 Nov 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால், நான் முதல்-மந்திரி ஆவேன் என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால், நான் முதல்-மந்திரி ஆவேன் என்று எடியூரப்பா கூறினார்.

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் முதல்-மந்திரி ஆவேன்

நான் எந்த விழாவுக்கு சென்றாலும், அங்கு பேசுபவர்கள் விரைவில் நான் (எடியூரப்பா) முதல்-மந்திரியாக இருப்பதாக சொல்கிறார்கள். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்யாது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் மோதிக்கொண்டுள்ளனர். அவர்கள் இதேபோல் செயல்பட்டு, கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால், பா.ஜனதா கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். நான் முதல்-மந்திரி ஆவேன். இந்த அரசு கவிழும் வரை நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருப்போம். எதிர்க்கட்சி தலைவராக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறேன். இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்விக்கான பொறுப்பை நானே ஏற்கிறேன்.

ஒற்றுமை இல்லாததும்...

கர்நாடக அரசின் மந்திரிகள் மற்றும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளில் தங்கி, வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தனர். இதன் காரணமாக பல்லாரி மற்றும் ஜமகண்டியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. எங்களிடம் சிறிது ஒற்றுமை இல்லாததும் தோல்விக்கு காரணம் ஆகும். வரும் காலத்தில் இதை சரிசெய்வோம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story