சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் முதல்-மந்திரி பட்னாவிஸ் தகவல்


சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் முதல்-மந்திரி பட்னாவிஸ் தகவல்
x
தினத்தந்தி 12 Nov 2018 5:00 AM IST (Updated: 12 Nov 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தகவல் வெளியிட்டார்.

நாக்பூர்,

சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தகவல் வெளியிட்டார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பு

மராட்டியத்தில் வரும் 19-ந் தேதி முதல் சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நாக்பூரில் உள்ள ராம்கிரி பங்களாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், “சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக மாநில மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும்” என கூறினார்

பா.ஜனதாவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா மற்றும் மற்ற கட்சிகள் இந்த மந்திரிசபை விரிவாக்கத்தை நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இருப்பினும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3 அல்லது 4 இடங்கள் நிரப்பப்படும்

சட்ட விதிமுறைகளின் படி மாநில சட்டமன்றத்தில் அதிகபட்சமாக 42 மந்திரிகள் மட்டுமே இருக்க முடியும். ஆனால் சட்டமன்றத்தில் 38 மந்திரிகள் உள்ளனர். இதில் 22 மந்திரிகளும், 16 இணை மந்திரிகளும் அடங்குவர். எனவே மேலும் 3 அல்லது 4 இடங்கள் இந்த விரிவாக்கத்தின்போது நிரப்பப்படும் என தெரிகிறது.

மந்திரிகள் 22 பேரில் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் 16 பேரும், சிவசேனாவினர் 5 பேரும், ராஷ்டிரீய சமாஜ் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருவரும் அடங்குவர்.

Next Story