பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்: 2 வாலிபர்கள் படுகாயம்


பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்: 2 வாலிபர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 12 Nov 2018 3:45 AM IST (Updated: 12 Nov 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு-செம்பட்டி சாலையில் பஸ்-மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளபட்டியை சேர்ந்த பாண்டி மகன் பிரதீப் (வயது 23), பசுங்கிளி மகன் நவீன் (19). இவர்கள் 2 பேரும் நேற்று மோட்டார்சைக்கிளில் செம்பட்டிக்கு சென்றனர். மோட்டார்சைக்கிளை பிரதீப் ஓட்டிச் செல்ல, நவீன் பின்னால் அமர்ந்து இருந்தார். வத்தலக்குண்டு-செம்பட்டி சாலையில் புதுகோடாங்கிபட்டி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் தனியார் நிறுவன பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story