என்ஜினீயரிங் பட்டதாரிகள் ராணுவத்தில் சேர்ப்பு
ராணுவத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களை பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப் படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது 129-வது தொழில்நுட்ப பட்டதாரிகள் நுழைவுத் திட்டத்தில் (டி.ஜி.சி.-129, ஜூலை 2019) பட்டதாரிகளை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேருபவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்த பயிற்சி நுழைவில் 40 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேருவதற்கான தகுதிகளை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 22 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-7-1992 மற்றும் 1-7-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.
கல்வித் தகுதி:
பி.இ, பி.டெக். பட்டப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களுக்கு டேராடூன் ராணுவ அகாடமியில் ஓராண்டு பயிற்சி வழங்கப்படும். இது 18 நிலை வரை பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கொண்ட பணிவாய்ப்பாகும்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். 28-11-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story