திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வியாபாரி பலி
சாலையின் குறுக்கே நாய் வந்ததால், மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி விழுந்து வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே உள்ள பெருமுடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்(வயது 39). இவர், தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் இரும்பு கடை நடத்தி வந்தார்.
தினமும் வீட்டில் இருந்து தனது மோட்டார்சைக்கிளில் கடைக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டுக்கு திரும்புவார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
புன்னப்பாக்கம்-பெருமுடிவாக்கம் நெடுஞ்சாலையில் புன்னப்பாக்கம் கிராம சாலை வளைவில் வந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன் மீது மோட்டார் சைக்கிள் மோதாமல் இருக்க ஆனந்த், திடீர் என்று பிரேக் பிடித்தார்.
இதில் நிலைதடுமாறிய அவர் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆனந்த், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு தலைமையிலான போலீசார், பலியான ஆனந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story