அங்கொன்றும், இங்கொன்றும் நடப்பதை வைத்து மோசம் என கணிக்கக்கூடாது: தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது - தேனியில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

x
தினத்தந்தி 12 Nov 2018 9:45 PM GMT (Updated: 12 Nov 2018 7:49 PM GMT)

அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சில பிரச்சினைகளை வைத்து மோசம் என்று கணிக்கக்கூடாது என்றும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறி னார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேனி, 

தேனி மாவட்டம் மலைகள் சூழ்ந்த மாவட்டம் என்று ஜெயலலிதா அடிக்கடி சொல்வார். இங்கு விவசாயம் நிறைந்த பகுதிகள் அதிகம் உள்ளது. உற்பத்தி செய்யும் விளை பொருட்களை சந்தைப் படுத்தும்போது விவசாயி களுக்கு நியாயமான விலை கிடைப்பது இல்லை. ஏற்ற, இறக்கத்தோடு விலை இருப்ப தால் உற்பத்தி செலவு கூடுத லாக உள்ளது.

இந்த நிலைமையை மாற்று வதற்காக தேனி மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஏற்கனவே நடந்தன. கிடைக்கும் விளை பொருட் களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்தும் போது, விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கக்கூடிய சூழல் ஏற்படும். இதற்காக, 500 ஏக்கர் பரப்பளவில் உணவு பூங்கா அமைக்கப்பட உள்ளது.

பெரியகுளம் பகுதியில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க 50 சதவீதம் மானியம் தருவதாக சட்டமன்றத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. யாராவது தனியார் அல்லது சிலர் கூட்டாக சேர்ந்து மாம் பழக்கூழ் தயாரிப்பு தொழிற் சாலை அமைக்க முன்வந்தால் அவர்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்திடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிர சாரத்தின்போது அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் போடி-மதுரை ரெயில் பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று கூறிய நிலையில், இன்னும் மாநில அரசு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யாதது ஏன்?

பதில்:- போடி-மதுரை ரெயில்பாதையை அகலப் படுத்தும் பணியானது மத்திய அரசின் திட்டம். அதை துரிதப்படுத்துவோம் என்று தான் ஜெயலலிதா சொன் னார். அந்த பணிகள் தற்போது நடந்து வருகிறது. மதுரையில் இருந்து ஆண்டிப்பட்டி வரை சிறு,சிறு பாலங்கள் அமைக் கும் பணி, தண்ட வாளம் அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக போதிய நிதி மத்திய அரசால் ஒதுக் கப்பட்டு உள்ளது. புதிய ரெயில்பாதை திட்டம் அமைப்பதற்கு தான் மாநில அரசின் பங்கீடு தேவை.

கேள்வி:- 18-ம் கால்வாய் விவசாயிகள் தங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்க வில்லை என்று கூறுகிறார் களே?

பதில்:- 18-ம் கால்வாய் தேவாரம் வரை செல்கிறது. தற்போது போடி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. நீட்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு சோதனை ஓட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டது. நிலையான அரசாணைக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டு உள்ளது. இன்னும் 10 நாட் களில் முறையான அரசாணை வெளியிடப்படும். அதன்பிறகு 18-ம் கால்வாய்க்கும், 58-க்கும் கால்வாய்க்கும் அரசாணை யில் குறிப்பிடும் அளவில் தண்ணீர் திறந்து விடப்படும்.

கேள்வி:- தமிழகத்தில் பாலி யல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளதே. அதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?

பதில்:- தமிழகத்தை பொறுத்தவரை சட்டம்- ஒழுங்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. அங் கொன்றும், இங்கொன்றுமாக நடக்கிற சில, பல பிரச்சினை களை வைத்து மோசம் என்று கணிக்கக்கூடாது. உடனடி யாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்ப ட்டு வருகிறது.

கேள்வி:- தமிழகத்தில் காய்ச்சலுக்கு மரணங்கள் அதிகரித்து வருவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

பதில்:- டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கு உரிய முன்னெச் சரிக்கை நடவடிக்கை, சுகா தாரத்துறை, உள்ளாட்சித்துறை மூலம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன. ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டு விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டுள்ளது. கொசு உற்பத்தியாகும் சூழல் இருந்த அரசு நிறுவனங்களின் மீதும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து காய்ச்சல் பரவுவதற்கான சூழல் இருப்ப தால், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகிறது. மேலும் காய்ச்சல் அறிகுறி தென்படும்போதே மருத்துவ மனைகளுக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கேள்வி:- முல்லைப்பெரி யாறில் புதிய அணை கட்ட கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?

பதில்:- அணையில் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தியதில் அணை பலமாக இருப்பதாக சான்றுகள் கொடுத்துள்ளனர். பூகம்பம் வந்தாலும் அணை உடைய வாய்ப்பு இல்லை. அதன் அடிப்படையில் தான் முல்லைப்பெரியாறு அணை யின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள லாம் என்றும், பேபி அணையை பலப்படுத்தி விட்டு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. பேபி அணையை பலப்படுத் துவதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான ஜல்லி, மணல் போன்ற பொருட்களை கொண்டு செல்ல முயன்றபோது கேரள அரசு தடுத்து நிறுத்திவிட்டது. மண்அணை மீது 156 மரங்கள் முளைத்துள்ளன. அந்த மரங் களை வெட்டுவதற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.

அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி வீதம் தான் தண்ணீர் திறந்து விடமுடியும். அதற்கு மேல் திறக்க முடியாது. அதற்கு மேல் வரும் தண்ணீர் எல்லாம் இடுக்கி அணைக்கு தான் செல்கிறது. மிகுதியான தண்ணீர் வரும்போது, உபரி நீரை திறக்காமல் இன்னும் 20 குழாய்கள் மூலம் எடுத்துக் கொள்ள அனுமதி கொடுத் தால் கூடுதல் தண்ணீரை கொண்டு வந்துவிடலாம். அதற்கு கேரள அரசு அனுமதி கொடுக்க மறுக்கிறது. அணையையே பராமரிக்க விடமாட்டேன் என்கிறார்கள். பிறகு எப்படி தண்ணீர் கொடுப்பார்கள். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கேரள அரசு தான் அகற்ற வேண் டும்.

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைத்து வருவது குறித்து உங்கள் கருத்து என்ன?

இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல கருத்து கூறி உள்ளார். அதுவே எனது கருத்தும். பொது வாகவே அவரவர் சுயநலத்துக் காக ஒவ்வொரு அரசியல் ரீதியான கொள்கைகளை மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் எடுக்கிறார்கள். அந்த வகையில் தான் சந்திர பாபு நாயுடுவும் முடிவு எடுத்துள்ளார்.

இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேட்டி அளித்தார்.

பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், தேனி எம்.பி. பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், சின்னமனூர் நகர செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக சின்னமனூர் அருகே உள்ள சங்கராபுரம் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான இடத்தை துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.அங்கொன்றும், இங்கொன்றும் நடப்பதை வைத்து மோசம் என கணிக்கக்கூடாது: தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது - தேனியில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தேனி, 
அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சில பிரச்சினைகளை வைத்து மோசம் என்று கணிக்கக்கூடாது என்றும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறி னார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேனி மாவட்டம் மலைகள் சூழ்ந்த மாவட்டம் என்று ஜெயலலிதா அடிக்கடி சொல்வார். இங்கு விவசாயம் நிறைந்த பகுதிகள் அதிகம் உள்ளது. உற்பத்தி செய்யும் விளை பொருட்களை சந்தைப் படுத்தும்போது விவசாயி களுக்கு நியாயமான விலை கிடைப்பது இல்லை. ஏற்ற, இறக்கத்தோடு விலை இருப்ப தால் உற்பத்தி செலவு கூடுத லாக உள்ளது.

இந்த நிலைமையை மாற்று வதற்காக தேனி மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஏற்கனவே நடந்தன. கிடைக்கும் விளை பொருட் களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்தும் போது, விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கக்கூடிய சூழல் ஏற்படும். இதற்காக, 500 ஏக்கர் பரப்பளவில் உணவு பூங்கா அமைக்கப்பட உள்ளது.

பெரியகுளம் பகுதியில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க 50 சதவீதம் மானியம் தருவதாக சட்டமன்றத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. யாராவது தனியார் அல்லது சிலர் கூட்டாக சேர்ந்து மாம் பழக்கூழ் தயாரிப்பு தொழிற் சாலை அமைக்க முன்வந்தால் அவர்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்திடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிர சாரத்தின்போது அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் போடி-மதுரை ரெயில் பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று கூறிய நிலையில், இன்னும் மாநில அரசு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யாதது ஏன்?

பதில்:- போடி-மதுரை ரெயில்பாதையை அகலப் படுத்தும் பணியானது மத்திய அரசின் திட்டம். அதை துரிதப்படுத்துவோம் என்று தான் ஜெயலலிதா சொன் னார். அந்த பணிகள் தற்போது நடந்து வருகிறது. மதுரையில் இருந்து ஆண்டிப்பட்டி வரை சிறு,சிறு பாலங்கள் அமைக் கும் பணி, தண்ட வாளம் அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக போதிய நிதி மத்திய அரசால் ஒதுக் கப்பட்டு உள்ளது. புதிய ரெயில்பாதை திட்டம் அமைப்பதற்கு தான் மாநில அரசின் பங்கீடு தேவை.

கேள்வி:- 18-ம் கால்வாய் விவசாயிகள் தங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்க வில்லை என்று கூறுகிறார் களே?

பதில்:- 18-ம் கால்வாய் தேவாரம் வரை செல்கிறது. தற்போது போடி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. நீட்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு சோதனை ஓட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டது. நிலையான அரசாணைக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டு உள்ளது. இன்னும் 10 நாட் களில் முறையான அரசாணை வெளியிடப்படும். அதன்பிறகு 18-ம் கால்வாய்க்கும், 58-க்கும் கால்வாய்க்கும் அரசாணை யில் குறிப்பிடும் அளவில் தண்ணீர் திறந்து விடப்படும்.

கேள்வி:- தமிழகத்தில் பாலி யல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளதே. அதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?

பதில்:- தமிழகத்தை பொறுத்தவரை சட்டம்- ஒழுங்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. அங் கொன்றும், இங்கொன்றுமாக நடக்கிற சில, பல பிரச்சினை களை வைத்து மோசம் என்று கணிக்கக்கூடாது. உடனடி யாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்ப ட்டு வருகிறது.

கேள்வி:- தமிழகத்தில் காய்ச்சலுக்கு மரணங்கள் அதிகரித்து வருவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

பதில்:- டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கு உரிய முன்னெச் சரிக்கை நடவடிக்கை, சுகா தாரத்துறை, உள்ளாட்சித்துறை மூலம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன. ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டு விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டுள்ளது. கொசு உற்பத்தியாகும் சூழல் இருந்த அரசு நிறுவனங்களின் மீதும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து காய்ச்சல் பரவுவதற்கான சூழல் இருப்ப தால், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகிறது. மேலும் காய்ச்சல் அறிகுறி தென்படும்போதே மருத்துவ மனைகளுக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கேள்வி:- முல்லைப்பெரி யாறில் புதிய அணை கட்ட கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?

பதில்:- அணையில் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தியதில் அணை பலமாக இருப்பதாக சான்றுகள் கொடுத்துள்ளனர். பூகம்பம் வந்தாலும் அணை உடைய வாய்ப்பு இல்லை. அதன் அடிப்படையில் தான் முல்லைப்பெரியாறு அணை யின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள லாம் என்றும், பேபி அணையை பலப்படுத்தி விட்டு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. பேபி அணையை பலப்படுத் துவதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான ஜல்லி, மணல் போன்ற பொருட்களை கொண்டு செல்ல முயன்றபோது கேரள அரசு தடுத்து நிறுத்திவிட்டது. மண்அணை மீது 156 மரங்கள் முளைத்துள்ளன. அந்த மரங் களை வெட்டுவதற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.

அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி வீதம் தான் தண்ணீர் திறந்து விடமுடியும். அதற்கு மேல் திறக்க முடியாது. அதற்கு மேல் வரும் தண்ணீர் எல்லாம் இடுக்கி அணைக்கு தான் செல்கிறது. மிகுதியான தண்ணீர் வரும்போது, உபரி நீரை திறக்காமல் இன்னும் 20 குழாய்கள் மூலம் எடுத்துக் கொள்ள அனுமதி கொடுத் தால் கூடுதல் தண்ணீரை கொண்டு வந்துவிடலாம். அதற்கு கேரள அரசு அனுமதி கொடுக்க மறுக்கிறது. அணையையே பராமரிக்க விடமாட்டேன் என்கிறார்கள். பிறகு எப்படி தண்ணீர் கொடுப்பார்கள். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கேரள அரசு தான் அகற்ற வேண் டும்.

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைத்து வருவது குறித்து உங்கள் கருத்து என்ன?

இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல கருத்து கூறி உள்ளார். அதுவே எனது கருத்தும். பொது வாகவே அவரவர் சுயநலத்துக் காக ஒவ்வொரு அரசியல் ரீதியான கொள்கைகளை மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் எடுக்கிறார்கள். அந்த வகையில் தான் சந்திர பாபு நாயுடுவும் முடிவு எடுத்துள்ளார்.

இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேட்டி அளித்தார்.

பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், தேனி எம்.பி. பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், சின்னமனூர் நகர செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக சின்னமனூர் அருகே உள்ள சங்கராபுரம் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான இடத்தை துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

Next Story