மாலுமி இல்லாத கப்பல் போல் அ.தி.மு.க. தவிக்கிறது - அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தாக்கு


மாலுமி இல்லாத கப்பல் போல் அ.தி.மு.க. தவிக்கிறது - அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தாக்கு
x
தினத்தந்தி 13 Nov 2018 4:30 AM IST (Updated: 13 Nov 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

மாலுமி இல்லாத கப்பல் போல் அ.தி.மு.க. தவிக்கிறது என்று அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கூறினார்.

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம் ஆகிய கிராமங்களில், ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய அ.ம.மு.க. செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் சத்திரப்பட்டி விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.

அ.ம.மு.க. மேற்கு மாவட்ட செயலாளரும், பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.யுமான சுப்பிரமணியன் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

எனது அரசியல் பயணத்தை தொடங்கி விட்டேன். உங்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன். மாலுமி இல்லாத கப்பல் போல் அ.தி.மு.க. தவிக்கிறது. அந்த கட்சியை வழி நடத்தும் தலைமை யார் என்று தெரியவில்லை. சாத்தூரில் போட்டியிட தயக்கம் காட்டுகிறார்கள். ஜெயலலிதா எனக்கு 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ. பதவி வழங்கினார்கள். பொது மக்களுக்கு தொண்டு செய்ய உத்தரவிட்டார்கள். அரசியல் சூழ்ச்சியின் காரணமாக எனது அரசியல் பயணத்தில் தொய்வு ஏற்பட்டுவிட்டது.

இதனை மக்கள் மன்றத்தில் வைக்கவே இங்கு வந்துள்ளேன்.

இவ்வாறு கூறினார்.

Next Story