மருத்துவ கவுன்சிலில் 57 டாக்டர்கள் போலி சான்று சமர்ப்பித்து மோசடி; ஒருவர் கைது
மருத்துவ கவுன்சிலில் 57 டாக்டர்கள் முதுகலை படிப்புக்கான போலி சான்றிதழ் சமர்ப்பித்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த டாக்டர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மராட்டியத்தின் டாக்டர்க ளாக பணிபுரிந்து வருபவர்கள் தங்களது முதுகலை படிப்புக்கான சான்றிதழ் களை மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து வருகிறார்கள். இதில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பதிவு செய்த வர்களில் 57 பேர் மும்பையில் உள்ள சி.பி.எஸ். கல்லூரி (காலேஜ் ஆப் பிசிசியன்ஸ் அண்டு சர்ஜியன்ஸ்) பெயரில் முதுகலை படிப்புக்கான சான்றிதழ்களை பதிவு செய்து இருந்தனர்.
இதில் சந்தேகம் அடைந்த மருத்துவ கவுன்சில் அதிகாரி கள் அந்த சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அனுப்பி விசாரித்தனர். இதில், அவை அனைத்து போலி யானவை என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
இதையடுத்து, மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் மேற்படி 57 டாக்டர்களையும் பிடித்து அதிரடி விசாரணை நடத்தினார்கள். இதில், பலர் மருத்துவ முதுகலை படிப்பு படிக்கவே இல்லை என்பதும், மற்றவர்கள் அதில் தோல்வி அடைந்து இருந்ததும் தெரியவந்தது.
மேலும் மருத்துவ கவுன்சில் பதிவுக்காக மும்பையை சேர்ந்த டாக்டர் சினேகல் நியதி(வயது44) என்பவர் தான் போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்ததாக கூறினார்கள்.
இதுபற்றி மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் அக்ரிபாடா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் சினேகல் நியதியை கைது செய்தனர்.
விசாரணையில், தலா ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வாங்கி கொண்டு அவர் அந்த போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக போலீ சார் அவரிடம் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி மாநில மருத்துவ கவுன்சில் தலைவர் சிவ்குமார் உட்டுரே கூறுகையில், ‘‘இது மிகப்பெரிய மோசடி. இது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கா விட்டால் போலி சான்றிதழ் கள் சமர்ப்பித்த அனைவரும் நோயாளிகளின் உயிருக்கு பெரும் ஆபத்தாக விளங்கி இருப்பார்கள்’’ என்றார்.

Related Tags :
Next Story