சங்கரன்கோவில் அருகே இருதரப்பினர் மோதல்; வக்கீல் உள்பட 7 பேர் கைது 30 பேர் மீது வழக்குப்பதிவு
சங்கரன்கோவில் அருகே இருதரப்பினர் மோதல் தொடர்பாக வக்கீல் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் அருகே இருதரப்பினர் மோதல் தொடர்பாக வக்கீல் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இருதரப்பினர் மோதல்
சங்கரன்கோவில் அருகே உள்ள வடமலாபுரத்தில் இருதரப்பை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இடையே சிறு, சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு அதை ஊர் பெரியவர்கள் பேசி தீர்த்து வைப்பது வழக்கம்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் ஒரு தரப்பை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அமர்ந்து சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர். இதை அதே ஊரை சேர்ந்த முகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சென்று தட்டி கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இருதரப்பினரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் சிலர் காயம் அடைந்தனர்.
7 பேர் கைது
இதுதொடர்பாக இருதரப்பினரும் சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த முகேஷ், பெரியதுரை, பூபதி, வக்கீல் முத்துசெல்வன், சாமுவேல், குருசாமி, கணேசன் ஆகிய 7 பேரை கைது செய்தனர். இருதரப்பை சேர்ந்த 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story