நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2018 11:00 PM GMT (Updated: 13 Nov 2018 3:57 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு அகஸ்தீஸ்வரம் வட்டக்கிளை தலைவர் சுப்பிரமணியபிள்ளை தலைமை தாங்கினார். செயலாளர் சசி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இணைச்செயலாளர் வேதமணி போராட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அய்யப்பபிள்ளை, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் லீடன்ஸ்டோன், அல்போன்ஸ், சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் சங்க கல்குளம் வட்டகிளை சார்பில் தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கல்குளம் கிளை தலைவர் வேதராஜ் தலைமை தாங்கினார். ராமசந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், அருள்பிரகாஷ், ராமசிபு, மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டர். போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

பூதப்பாண்டியில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டக்கிளை தலைவர் சுப்பிரமணியபிள்ளை தலைமை தாங்கினார். செயலாளர் வேலாயுத பெருமாள் கோரிக்கைகளை விளக்கி பேசினார். போராட்டத்தை மாவட்ட துணை தலைவர் நீலகண்ட பிள்ளை தொடங்கி வைத்தார்.

இதில், ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டக்கிளை இணை செயலாளர் மாணிக்கவாசகம் பிள்ளை நன்றி கூறினார்.

Next Story