10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடந்தது
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார்். துணைத்தலைவர்கள் கண்ணன், தனசேகரன், இணை செயலாளர்கள் ராஜகோபாலன், சோமு, பிரேமா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட துணைத்தலைவர் சண்முகம் வரவேற்றார்.
மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன், வட்ட செயலாளர் அன்புமணி, இந்திய தொழிற்சங்க மைய நிர்வாகி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவக்காப்பீடு திட்டத்தை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை போல் அரசே ஏற்று நடத்த வேண்டும். மருத்துவப்படியை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். காப்பீடு சந்தாத்தொகை ரூ.350-ல் இருந்து ரூ.150 குறைக்க வேண்டும்.
மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போல் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story