திருவானைக்காவல் மேம்பாலம் அணுகுசாலை அமைப்பதற்கு இடையூறாக இருந்த கட்டிடங்கள் இடிப்பு


திருவானைக்காவல் மேம்பாலம் அணுகுசாலை அமைப்பதற்கு இடையூறாக இருந்த கட்டிடங்கள் இடிப்பு
x
தினத்தந்தி 13 Nov 2018 10:45 PM GMT (Updated: 13 Nov 2018 9:00 PM GMT)

திருவானைக்காவல் மேம்பாலம் அணுகுசாலை அமைப்பதற்கு இடையூறாக இருந்த கட்டிடங்களை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினார்கள்.

திருச்சி,

திருச்சி- ஸ்ரீரங்கம் இடையே மாம்பழச்சாலை பகுதியில் இருந்த பழைய ரெயில்வே மேம்பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் ஒரு பகுதி ஸ்ரீரங்கம் மற்றும் சென்னை சாலையையும், இன்னொரு பகுதி திருச்சி நகருக்குள் நேரடியாக வரும் வகையிலும், இன்னொரு பகுதி பைபாஸ் சாலையை இணைக்கும் வகையிலும் கட்டப்பட்டு உள்ளது. ஸ்ரீரங்கம் பகுதியில் அணுகுசாலை அமைப்பதற்கு பல கட்டிடங்கள் இடையூறாக இருந்து வந்தன.

இவற்றை அப்புறப்படுத்தும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் ஏற்கனவே நோட்டீசு அனுப்பி இருந்தனர். ஆனால் அவர்கள் தாங்களாகவே அப்புறப்படுத்திக்கொள்ளாமல் காலம் கடத்தி வந்தனர். இந்நிலையில் திருவானைக்காவலில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு திரும்பும் சாலையில் இருந்த வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என சுமார் 30 கட்டிடங்களை நேற்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தினார்கள். கட்டிடங்கள் இடிக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து அந்த பகுதியில் அணுகுசாலை அமைப்பதற்கான வேலைகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

Next Story