கந்தசஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


கந்தசஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 14 Nov 2018 4:00 AM IST (Updated: 14 Nov 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

கந்தசஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி,

கந்த சஷ்டியை யொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில் கந்த சஷ்டியை யொட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை முருகனுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

பின்னர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

நெய் விளக்கு

நிகழ்ச்சியில் திரளான பெண்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள். சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் தலைவர் சுதர்சனம் மற்றும் கோவில் அறங்காவலர் ரவி குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

இதே போல ஜெகதேவி முருகன் கோவில், ஓசூர் வேல்முருகன் கோவில், அகரம் முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டியை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story