இனி வெங்காயம் உரிக்கும் போது கண்ணீர் விட வேண்டாம்


இனி வெங்காயம் உரிக்கும் போது கண்ணீர் விட வேண்டாம்
x
தினத்தந்தி 14 Nov 2018 12:34 PM IST (Updated: 14 Nov 2018 12:34 PM IST)
t-max-icont-min-icon

இனி வெங்காயம் உரிக்கும்போது கூட கண்ணீர் விட வேண்டிய அவசியம் இல்லை.

புது மணப்பெண்ணை திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்பும்போது, மாப்பிள்ளையிடம் என் மகளின் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள், மாப்பிள்ளையோ வெங்காயம் உரிக்கும்போது வந்தால் என்ன செய்வது என்று சூழ்நிலையை சிரிப்பாக்கிவிடுவார்.

ஆனால் உண்மையிலேயே இனி வெங்காயம் உரிக்கும்போது கூட கண்ணீர் விட வேண்டிய அவசியம் இல்லை. வெங்காயம் உரிக்கும்போது அதிலிருந்து வெளியாகும் என்ஸைம்கள் கண்ணீரை வரவழைக்கின்றன. அதை உறிஞ்சிக் கொள்ளும் வகையிலான கண்ணாடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை அணிந்து கொண்டு வெங்காயம் வெட்டினால் கண்ணீர் வராது. அதோடு சமையலறையில் அப்பளம், வடாம் பொறிக்கும்போது ஏற்படும் எண்ணெய் புகை உள்ளிட்டவற்றையும் உறிஞ்சிவிடும்.

மனைவி மீது அக்கறை உள்ள கணவன்மார்கள் இதை வாங்கித் தரலாம். இதன் விலை ரூ. 367. இதை அமேசான் இணையதளத்தின் மூலம் வாங்க முடியும்.

Next Story