இனி ஆடிக்கொண்டே போட்டோ எடுக்கலாம்


இனி ஆடிக்கொண்டே போட்டோ எடுக்கலாம்
x
தினத்தந்தி 14 Nov 2018 12:50 PM IST (Updated: 14 Nov 2018 12:50 PM IST)
t-max-icont-min-icon

இந்த கேமரா நாம் ஆடினாலும் அசைந்தாலும் கூட அழகாக புகைப்படம் எடுக்கும்.

கோ புரோ ஹீரோ 7 கேமரா அருமையான மற்றும் துல்லியமான போட்டோக்களை எடுக்க உதவுகிறது. இதெல்லாம் செல்போனில் பண்ண முடியுமே தனியே கேமரா எதற்கு என்று எண்ணுவோர் கூட ஹீரோ 7-ன் சிறப்பம்சங்களை கேட்டால் வியந்து போவார்கள்.

டச் ஸ்க்ரீன் கொண்ட இந்த கேமரா அதி அற்புதமான தரத்தில் படங்களை எடுக்கிறது. நாம் ஆடினாலும் அசைந்தாலும் கூட புகைப்படம் அழகாக கிடைக்கும். உயர் தர 10 எம்.பி. போட்டோக்களை எடுக்க உதவுகிறது. பர்ஸ்ட் (burst) எனப்படும் மோடில் வைத்தால் ஒரு நொடியில் சரசரவென்று 15 போட்டோக்களை எடுத்து தள்ளிவிடும். சின்ன சின்ன அசைவுகளை கூட தவறவிடாமல் படம் பிடிக்கலாம். அது மட்டுமின்றி ஒரு முழு நீள ஹெட்ச்.டி (HD) திரைப்படமே இதனை கொண்டு எடுக்க முடியும். யூ-டியூப் சேனல்களுக்கு வீடியோ எடுக்க ஒரு அருமையான தேர்வு இந்த கேமரா.

கோ புரோ ஆப் மூலம் உடனடியாக நாம் எடுத்த புகைப்படங்களை முகநூலிலோ இன்ஸ்டாகிராமிலோ பகிரலாம். நமது செல்லப் பிராணியுடன் விளையாடிக் கொண்டோ, தண்ணீரில் சாகசம் செய்து கொண்டோ கூட புகைப்படங்களை எடுக்கலாம். ஆடாமல் அசையாமல் போஸ் கொடுக்க தேவை இல்லை. வாட்டர் புரூப்பாக இருப்பதால் நீரில் பட்டால் வேலை செய்யாது என்கிற பயமில்லை. கோ புரோ கேமராவில் ஒரு பெரிய குழுவுடன் செல்பி எடுத்தால் அனைவரையும் கவர் செய்துவிடும்.

இது செல்போன் கேமராக்களில் இல்லாத ஒரு தனித்துவமான அம்சம். புளூடூத் அல்லது வை-பை (WIFI) மூலம் நமது செல்போனை இணைத்துக் கொள்ளலாம். இதன் விலை 33,900 ரூபாய்.

Next Story