சுடச் சுட பிரிண்ட் போடுங்க
இன்றைய தலைமுறையினர் எப்படி ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியாதோ அதே போல் தினசரி போட்டோ எடுத்து பகிராமலும் இருக்க முடியாது என்று ஆகிவிட்டனர்.
இவர்களின் தேவைக்காகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த பிரிண்ட் பாக்கெட் (pyrnt pocket) கருவி. இந்த கருவியை நமது ஐ-போனுடன் இணைத்து விட்டால் நமது போனை ஒரு போலராய்டு கேமராவாக மாற்றிவிடும். அதாவது நாம் எடுத்த புகைப்படங்களை உடனடியாக நமது தேவைக்கேற்ப பிரிண்ட் செய்து விடும். இதற்கென பிரத்யேகமாக இங்க் எதுவும் தேவையில்லை. வழுவழுப்பான பிரிண்ட்கள் நமது புகைப்படத்தை ஸ்டிக்கர் போன்ற தோற்றத்தில் அழகாக காண்பிக்கும். இதன் ஆப் நமது படங்களை ஒரு அருமையான வீடியோவாக மாற்றி காண்பிக்கும். ஒரே நேரத்தில் 20 புகைப்படங்களை பிரிண்ட் செய்யலாம். கண்ணைக் கவரும் பல வண்ணங்களில் இந்த பிரிண்டர் கிடைக்கிறது. இதன் விலை 128 அமெரிக்க டாலர்கள்.
Related Tags :
Next Story