உடமைகளை பாதுகாக்கும் ஸ்மார்ட் பூட்டு


உடமைகளை பாதுகாக்கும் ஸ்மார்ட் பூட்டு
x
தினத்தந்தி 14 Nov 2018 2:51 PM IST (Updated: 14 Nov 2018 2:51 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு தங்கள் உடமைகளை பத்திரமாக வைத்துக்கொள்ள இந்த சிறிய ஸ்மார்ட் லாக் உதவும்.

வீ ட்டில் முக்கியமான பத்திரங்களோ அல்லது நகைகளோ வைத்துவிட்டு வெளியில் செல்லும்போது திருடு போய் விடுமோ என்று பயந்து கொண்டே செல்பவர்களுக்கு நிம்மதி அளிக்கவே வந்திருக்கிறது இந்த ஸ்மார்ட் ஆர்மர் க்யூப். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தங்கள் உடமைகளை பத்திரமாக வைத்துக்கொள்வதற்கும் இந்த சிறிய ஸ்மார்ட் லாக் உதவும். பேங்க் லாக்கருக்கு இணையான பாதுகாப்பை இது அளிக்கிறது. இது புளூ டூத் தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. நமது ஸ்மார்ட் போனை கொண்டு தான் இதை திறக்க முடியும். எந்த ஒரு அலமாரியிலோ அல்லது டிராயரிலோ கச்சிதமாக பொருந்தி கொள்ளும் இந்த லாக். ஒரு சில விநாடிகளிலேயே இன்ஸ்டால் செய்து கொள்ளும். வாழ்நாள் முழுவதற்கும் நீடித்த பாதுகாப்பை தரும். சாவி கொத்துகளுக்கோ சாவி துவாரத்துக்கோ இனி வேலை இல்லை. திருடன் வந்தால் ஹேர்பின்னை வைத்து குடைந்து கதவை திறப்பதற்கு பதில் இதை எப்படி திறப்பது என்று மண்டையை குடைந்து கொள்ள வேண்டி வரும். இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்.

* எந்த மொபைல் நம்பருடன் இந்த லாக்கை இணைக்க போகிறோம் என்று ஒரு ப்ரொபைல் (profile ) உருவாக்கி இதில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

* அடுத்ததாக நம் வீட்டில் உள்ள யாரெல்லாம் இந்த லாக்கை பயன்படுத்தலாம் என்று அவர்கள் நம்பர்களையும் பதிவு செய்ய வேண்டும்.

* எவ்வளவு தொலைவில் இருந்து அன்லாக் செய்வது என்றும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

* வேறு யாராவது லாக்கை நமக்கு தெரியாமல் திறக்க முயற்சித்தால் அலாரம் அடிக்கும் படி செட் செய்ய வேண்டும். அவ்வளவு தான். நமது ஸ்மார்ட் லாக் உபயோகிக்க தயாராகிவிட்டது.

இதன் பேட்டரி ஒன்று முதல் இரண்டு வருடங்களுக்கு நீடித் து உழைக்கும். பேட்டரியின் ஆயுட்காலம் முடியும் தருவாயில் ஆட்டோமேட்டிக்காக லாக் திறந்து கொள்ளும். பொருளை சேர்ப்பதை விட அதை பத்திரமாக பாதுகாப்பது முக்கியம். எனவே ஸ்மார்ட் ஆர்மர் க்யூப் வாங்கி உடமைகளை பத்திரப்படுத்துங்கள்.

Next Story