நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ரூ.30 லட்சத்தில் வினோத காட்சி அரங்கம் கலெக்டர் ஷில்பா திறந்து வைத்தார்


நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ரூ.30 லட்சத்தில் வினோத காட்சி அரங்கம் கலெக்டர் ஷில்பா திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 14 Nov 2018 10:15 PM GMT (Updated: 14 Nov 2018 1:37 PM GMT)

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வினோத காட்சி அரங்கை கலெக்டர் ஷில்பா திறந்து வைத்தார்.

நெல்லை, 

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வினோத காட்சி அரங்கை கலெக்டர் ஷில்பா திறந்து வைத்தார்.

வினோத காட்சி அரங்கம்

நெல்லை கொக்கிரகுளத்தில் மாவட்ட அறிவியயல் மையம் உள்ளது. இங்கு பல்வேறு புதிய படைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதன் படி 850 சதுர அடி பரப்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் வினோத அறிவியல் என்ற புதிய காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மின்சாரமும் காந்தவியலும், ஒளியியலும் மாயை என்ற கருப்பொருளுடன் 22 விதமான அறிவியல் காட்சி மாதிரிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த வினோத காட்சி அரங்கத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டு அரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் நெல்லை மண்டல அண்ணா பல்கலைக்கழக டீன் சக்திநாதன், பெங்களூரு அறிவியல் மைய இயக்குனர் மதனகோபால், மைய பொறுப்பாளர் தாஜூபாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வினோத அறிவியல் காட்சி அரங்கை பள்ளி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.

வாழ்வியலில் நிகழும் அறிவியல்

இதுகுறித்து பெங்களூரு அறிவியல் மைய இயக்குனர் மதனகோபால் கூறுகையில், நமது அன்றாட வாழ்வியலில் நிகழும் அறிவியல் குறித்து இங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இதனை உள் வாங்கி புரிந்து கொண்டால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை அறிவியல் அறிவு மேம்படும். இதுபோன்ற வினோத அறிவியல் காட்சி அரங்குகளுக்கு மாணவ–மாணவிகளிடமும், பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது என்றார்.


Next Story