ஜி.எஸ்.டி. தொடர்பான பிரச்சினைகள் குறித்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கான விளக்க கூட்டம் மத்திய அரசு ஆணையர் பங்கேற்பு
ஜி.எஸ்.டி. தொடர்பான பிரச்சினைகள் குறித்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன உரிமையாளர்கள் தெரிந்து கொள்வதற்கான விளக்க கூட்டம் வேலூரில் நடந்தது. இதில் மத்திய அரசு ஆணையர் ஜி.ரவீந்திரநாத் கலந்து கொண்டு, நிறுவன உரிமையாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.
வேலூர்,
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக கடன் உதவித் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2-ந் தேதி அமல்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக ஜி.எஸ்.டி. தொடர்பான அனைத்து விஷயங்களில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவி செய்ய ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால்துறை வேலூர் கோட்ட அலுவலகம், ராணிப்பேட்டை கோட்ட அலுவலகம் என 2 ஜி.எஸ்.டி. உதவி மையங்களை உருவாக்கி உள்ளது.
இந்தநிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தோல் தொழில் நிறுவன உரிமை யாளர்கள், தொழில் முனை வோர்களுக்கான ஜி.எஸ்.டி. குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய விளக்க கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது.
வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசினார். மாநில வரிகள் வேலூர் அலுவலக இணை ஆணையர் எஸ்.ரசியா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வி.மணிவண்ணன், இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் எஸ்.சுந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். வேலூர் கோட்ட உதவி ஆணையர் சுப்பிர மணியன் வரவேற்றார்.
கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் ஆணையர் (சென்னை புறநகர் பிரிவு) ஜி.ரவீந்திரநாத் கலந்து கொண்டு பேசினார். அப் போது அவர் பேசியதாவது:-
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்துள்ளார். இதன்மூலம் 59 நிமிடத்தில் கடன் பெறும் நிலை உருவாகி உள்ளது. அவர்கள் ஜி.எஸ்.டி. செலுத்து வதில் உள்ள சந்தேகங்களை தீர்க்க இக்கூட்டம் பயன்படும். மேலும் வரிக்கான கடன் கிடைக்கச் செய்தல், ஜி.எஸ்.டி. வரியில் திரும்ப கோருவதற் கான முறைகள் ஆகியவற்றில் நுட்பமான பிரச்சினைகளை அறிய ஜி.எஸ்.டி. உதவி மையங்களை நாடலாம்.
அடுத்த 100 நாட்களுக்கு இந்த தொழில் பிரிவுகள் கூடுதல் வரியை திரும்ப பெறுவதற்கு இந்த மையம் முன்னுரிமை அளிக்கும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வர்த்தக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த மாவட்டத்தில் சிறப்பு உதவித் திட்டத்தை செயல்படுத்து வதற்கும் திட்டமிடப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசி னார்.
இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட நிறுவன உரிமையாளர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்தார். முடிவில் ராணிப்பேட்டை கோட்ட உதவி ஆணையர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story