கருங்கல் அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் மனைவி சாவு


கருங்கல் அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் மனைவி சாவு
x
தினத்தந்தி 14 Nov 2018 10:15 PM GMT (Updated: 14 Nov 2018 8:37 PM GMT)

கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் மனைவி பலியானார்.

கருங்கல்,

கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் மனைவி பரிதாபமாக இறந்தார்.

இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

களியக்காவிளை அருகே சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 57), முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி மேழ்சி (52).

சம்பவத்தன்று கணேசன் நாகர்கோவிலில் பொருட்கள் வாங்குவதற்காக தனது மனைவியை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கு பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் சூரியகோடுக்கு புறப்பட்டார். இந்தநிலையில் புதுக்கடை-பரசேரி சாலையில் மத்திக்கோடு பகுதியில் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் இருந்த ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கியதில் மோட்டார் சைக்கிள் திடீரென கவிழ்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்ட மேழ்சிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணேசன் படுகாயம் அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மேழ்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்த னர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

விபத்து நடந்த சாலையில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்படுவதும், அதை சீரமைப்பதும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு ஏற்படும் பள்ளத்தில் தினமும் பல வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இந்த நிலையில் தான் கணேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் குழாய் உடைப்பு பள்ளத்தில் சிக்கி மேழ்சி இறந்துள்ளார்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய்களையும், சாலையையும் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story