குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு


குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 14 Nov 2018 9:45 PM GMT (Updated: 14 Nov 2018 9:10 PM GMT)

குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் உட்கோட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து 1 கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் போன்றவை திருடப்பட்டது. இது தொடர்பாக பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டை என்ற இடத்தில் திருச்சி சிவாகுடி பகுதியை சேர்ந்தவர் சிங்காரம் என்கிற சிங்காரவேலன் (வயது 25) என்பவர் திருடியது தெரியவந்தது. அவரை போலீசார்கைது செய்தனர்.

இதையொட்டி, காஞ்சீபுரம் நகரதுணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், போலீசார் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த சிங்காரத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு சிபாரிசு செய்தார்.

அவர் உடனடியாக மாவட்ட கலெக்டருக்கு கோப்புகளை அனுப்பினார். மாவட்ட கலெக்டர் பொன்னையா, சிங்காரத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் வேலூர் சிறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

காஞ்சீபுரத்தை அடுத்த வெண்குடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (45). சாராய வியாபாரி. சில நாட்களுக்கு முன்பு சாராயம் வைத்திருந்ததாக கணேசனை வாலாஜாபாத் போலீசார் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். இதையொட்டி, கணேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு சிபாரிசு செய்தார்.

அவர் உடனடியாக மாவட்ட கலெக்டருக்கு கோப்புகளை அனுப்பினார். மாவட்ட கலெக்டர் பொன்னையா, கணேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் வேலூர் சிறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.


Next Story