சுங்குவார்சத்திரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 10 பேர் காயம்


சுங்குவார்சத்திரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 10 பேர் காயம்
x
தினத்தந்தி 15 Nov 2018 2:45 AM IST (Updated: 15 Nov 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

சுங்குவார்சத்திரம் அருகே வேன் கவிழ்ந்து 10 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த 13 பேர் வேலூரில் நடைபெற்ற உறவினர் திருமணத்துக்காக நேற்று முன்தினம் வேலூர் சென்றனர். திருமணம் முடிந்ததும் நேற்று மாலை சென்னைக்கு திரும்பினர். பெங்களூரு–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் அருகே கூட்டுச்சாலையில் வேன் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அந்த வேன் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த கீதா, அனுசுயா உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். 3 பேர் காயமின்றி உயிர் தப்பினர். இதைப்பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில், கீதா, அனுசுயா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தண்டலம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story