புதுவை அரசின் கடனை தள்ளுபடி செய்யவேண்டும் - ம.தி.மு.க. வலியுறுத்தல்


புதுவை அரசின் கடனை தள்ளுபடி செய்யவேண்டும் - ம.தி.மு.க. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Nov 2018 12:07 AM GMT (Updated: 15 Nov 2018 12:07 AM GMT)

புதுவை அரசின் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசை கவர்னர் வலியுறுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி,

ம.தி.மு.க.வின் புதுவை மாநில செயற்குழு கூட்டம் நீடராசப்பர் வீதியில் உள்ள செகா கலைக்கூடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில பொறுப்பாளர் கபிரியேல் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி, தலைமை கழக அமைப்பு செயலாளர் வந்தியதேவன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் மாநில பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பாவாடைசாமி, கலைவாணன், செல்வராசு, ஏழுமலை, பட்டு முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், பணியாற்றுவது குறித்தும் கட்சி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

*புதுவையில் ஆளும் அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கொடுக்க மறுக்கும் கவர்னரின் செயலை வன்மையாக கண்டிப்பது.

*2018–19 நிதியாண்டில் ரோடியர் மில்லுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.13 கோடியை உடனே வழங்கவேண்டும்.

*புதுச்சேரி அரசு பெற்றுள்ள ரூ.8 ஆயிரம் கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய கவர்னர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

*புதுவையில் நோய் பாதிப்பு அதிக அளவில் இருந்து வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய மருந்து மாத்திரைகளை வைக்கவேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story