கடனை திருப்பி செலுத்தும்படி நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடியால் முந்திரி வியாபாரி தற்கொலை
நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால் முந்திரி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
ராஜாக்கமங்கலம்,
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 60). இவர் முந்திரி வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி கமலாதேவி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மனோகரன் வியாபாரத்துக்காக தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.20 லட்சம் கடன் வாங்கினார். அதில் சிறிது பணத்தை திருப்பி கொடுத்தார். மீதி பணத்தை கொடுக்க முடியாமல் மனோகரன் அவதிப்பட்டார். தொழிலும் லாபகரமாக இயங்காததால் மனமுடைந்த நிலையில் இருந்தார்.
இந்தநிலையில் வாங்கிய கடனை திருப்பி கட்டக்கோரி நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் மனோகரனுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனோகரன் செய்வதறியாமல் திகைத்தார். கடனை எப்படியாவது கட்ட முயற்சி செய்தார். ஆனால் அவரால் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சாவதே மேல் என்று முடிவெடுத்தார். நேற்றுமுன்தினம் இரவு மனோகரன் விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே மனோகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து மனோகரனின் 2–வது மகன் ராஜேஷ் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தி விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே போலீசார், மனோகரன் விஷம் குடித்த அறையை சோதனை செய்தனர். அப்போது மனோகரன் சாவதற்கு முன்பு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், நிதி நிறுவன ஊழியர்கள் கடனை திருப்பி செலுத்துமாறு நெருக்கடி கொடுத்ததால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டை பூட்டி சீல் வைத்து விடுவோம் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மனோகரன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. நிதி நிறுவன ஊழியர்கள் கடனை திருப்பிச் செலுத்துமாறு நெருக்கடி கொடுத்ததால் முந்திரி வியாபாரி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story