திருவள்ளூரில், ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருவள்ளூரில், ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Nov 2018 10:15 PM GMT (Updated: 15 Nov 2018 9:25 PM GMT)

ஊத்துக்கோட்டை, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் எதிரே ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 21 மாத ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். மாதம்தோறும் மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அரசு பஸ்களில் 50 சதவீதம் பயணச்சலுகை வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை ரூ.3 லட்சம் வாரிசுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க கிளைத்தலைவர் குமரன்தம்பி தலைமை தாங்கினார்.

பாதிரிவேடு கிளைத்தலைவர் முத்துகிருஷ்ணுடு, மீஞ்சூர் கிளை தலைவர் பாஸ்கர்ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் வரவேற்றார். மாநில அமைப்புச்செயலாளர் சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாவட்ட அமைப்பு செயலாளர் லோகநாதன், இணைச்செயலாளர் முனுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிளை இணைச்செயலாளர் மேத்யூ நன்றி கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க வட்டார தலைவர் ஸ்ரீராமுலுரெட்டி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் நரசிம்முலுநாயுடு, மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், வட்ட துணை தலைவர் கிருஷ்ணப்ப முதலி, வட்டார இணை செயலாளர் பாளையத்து ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டசெயலாளர் தணிகாசலம் வரவேற்றார்.

மாவட்ட பிரச்சார செயலாளர் சின்னப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் திருவள்ளூர் கிளைத்தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எத்திராஜ், மாவட்ட தலைவர் ரூஸ்வெல்ட், செயலாளர் மணி, நிர்வாகிகள் சுந்தரம், முத்துகிருஷ்ணன், ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் கலந்து கொண்டு 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story