மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் கோவில் விழாவில்பெண்ணிடம் நகை பறிப்பு; அக்காள்-3 தங்கைகள் கைது + "||" + Tiruchendur temple festival Jewelry flush Arrested-3 sisters arrested

திருச்செந்தூர் கோவில் விழாவில்பெண்ணிடம் நகை பறிப்பு; அக்காள்-3 தங்கைகள் கைது

திருச்செந்தூர் கோவில் விழாவில்பெண்ணிடம் நகை பறிப்பு; அக்காள்-3 தங்கைகள் கைது
திருச்செந்தூரில் கோவில் விழாவில் பெண்ணிடம் நகை பறித்த அக்காள்-3 தங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் கோவிலில் நடந்த திருக்கல்யாண விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நடமாடிய 4 பெண்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இந்த விசாரணையில் அவர்கள், பெங்களூரு நிலமங்களா பைபாஸ் ரோடு குனிக்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மனைவி சிவம்மாள் (வயது 47), சீனிவாசன் மனைவி மஞ்சுளா (40), சேகர் மனைவி கவுரி (34), குமார் மனைவி வசந்தா (32) என்பதும், இவர்கள் 4 பேரும் அக்காள்-தங்கைகள் என்பதும் தெரியவந்தது.

மேலும், இவர்கள் 4 பேரும் சேர்ந்து, கடந்த 6-ந்தேதி திருச்செந்தூர் கோவில் விழாவில் சூரசம்ஹாரம் நடந்தபோது, திருச்செந்தூர்-பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பாளையங்கோட்டை பெருமாள்புரம் தமிழ் நகரைச் சேர்ந்த அண்ணாமலையின் மனைவி கோமதியிடம் 4½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சிவம்மாள் உள்ளிட்ட 4 பேரையும் திருச்செந்தூர் தாலுகா போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4½ பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை திருச்செந்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...