அரூருக்கு 24-ந்தேதி வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
அரூருக்கு 24-ந்தேதி வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் மாதையன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் சூடப்பட்டி சுப்ரமணி, லட்சுமி மாது, மாநில நிர்வாகிகள் கீரை விஸ்வநாதன், ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு மாவட்ட பொறுப்பாளர்கள் பார். இளங்கோவன், தமிழ்மணி, மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் விளக்கி பேசினார்கள். தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பின் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக தர்மபுரி மாவட்டம் அரூருக்கு வருகிற 24-ந்தேதி வருகிறார். சின்னாங்குப்பத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார். அவருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.
பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். இதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தர்மபுரி தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் முகவர் பட்டியலை உடனே தயார் செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் மணி, முருகன், பிரபு ராஜசேகர், சந்திரமோகன், நகர செயலாளர் தங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோகரன், வேடம்மாள், முன்னாள் நகராட்சி தலைவர் சிட்டி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், சேட்டு, கோபால் உள்பட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் முனிராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story