மும்பையில் துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்


மும்பையில் துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 17 Nov 2018 5:29 AM IST (Updated: 17 Nov 2018 5:29 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் துப்புரவு பணியாளர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகர் முழுவதும் குப்பைகுவிந்து கிடந்தது.

மும்பை, 

மும்பை பெருநகரத்தில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, லாரிகள் மூலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று கொட்டப்பட்டு வருகின்றன. இந்த பணியை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இதை கண்டித்து நேற்று மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் சேகரிக்கும் பணி முடங்கியது. மேலும் இந்த முடிவை கைவிட வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் ஆசாத் மைதானத்தில் திரண்டு போராட்டம் செய்தனர்.

துப்புரவு பணியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நகரில் நேற்று குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது. துர்நாற்றம் வீசியது. குப்பைகள் கொண்டு செல்லும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மாநகராட்சியின் இந்த முடிவால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கூறினர். இந்த முடிவை மாநகராட்சி கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறினர்.

Next Story