நைஸ் ரோடு முறைகேடு அறிக்கைக்கு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை : குமாரசாமி சொல்கிறார்


நைஸ் ரோடு முறைகேடு அறிக்கைக்கு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை : குமாரசாமி சொல்கிறார்
x
தினத்தந்தி 17 Nov 2018 5:41 AM IST (Updated: 17 Nov 2018 5:41 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு விதான சவுதாவில் பத்திரப்பதிவுக்காக காவேரி ஆன்-லைன் சேவையை தொடங்கி வைத்த பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூரு, 

பெங்களூரு-மைசூரு இடையிலான நைஸ் ரோடு முறைகேடு குறித்த அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். மேலும் நான் இந்த விஷயத்தில் சரியாக செயல்படவில்லை என்கிறார்கள். இந்த நைஸ் ரோடு முறைகேடு குறித்து நான் முன்பு முதல்-மந்திரியாக இருந்தபோது, மந்திரி சபையில் விவாதிக்க முடிவு செய்திருந்தேன். இதற்காக கூட்டப்பட்ட மந்திரிசபை கூட்டத்தை கூட்டணியில் இருந்த பா.ஜனதா மந்திரிகள் புறக்கணித்துவிட்டனர்.

நைஸ் ரோடு முறைகேடு தொடர்பான அறிக்கைக்கு மாநில அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. அதற்கு ஒப்புதல் வழங்கிய பிறகு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நான் பதவி ஏற்று சுமார் 6 மாதங்கள் ஆகின்றன. சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள். அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசுக்கு மந்திரி டி.கே.சிவக்குமாரே உரிய பதில் கொடுப்பார். இதற்கும், அரசுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story