10-ம் வகுப்பு படித்து விட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது


10-ம் வகுப்பு படித்து விட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 18 Nov 2018 3:45 AM IST (Updated: 17 Nov 2018 11:18 PM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு படித்து விட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

கல்பாக்கம்,

கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினம் பொய்கைகரை பகுதியில் சுப்ரதாதாஸ் (வயது 27) என்பவர் கிளினிக் நடத்தி வந்தார். இதில் சந்தேகம் அடைந்த நோயாளி ஒருவர் காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரபணி இணை இயக்குனர் ஜீவாவுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து மருத்துவக்குழுவினர் அந்த கிளினிக்குக்கு சென்று சோதனையிட்டு விசாரித்தனர். விசாரணையில் சுப்ரதாதாஸ் 10-ம் வகுப்பு மட்டுமே படித்திருப்பதும் அனுமதி இல்லாத மருந்துகளை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் சதுரங்கபட்டினம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் போலி டாக்டரான சுப்ரதாதாசை கைது செய்து மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

இவர் கல்பாக்கம் பகுதி வடமாநில நபர்களுக்கு போதை ஊசி மருந்துகள் ஏதேனும் கொடுத்துள்ளாரா? மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் கல்பாக்கத்திற்கு வந்து கிளினிக் நடத்தியது எப்படி? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story