ஆசி வழங்குவதாக கூறி பணம் பறிப்பு: திருநங்கைகள் உள்பட 3 பேர் கைது


ஆசி வழங்குவதாக கூறி பணம் பறிப்பு: திருநங்கைகள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Nov 2018 3:45 AM IST (Updated: 18 Nov 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஆசி வழங்குவதாக கூறி 2 திருநங்கைகளும், ஒரு பெண்ணும் ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றுவிட்டனர். இதுதொடர்பாக ஜெயஸ்ரீ பாண்டிபஜார் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார்.

சென்னை,

சென்னை தியாகராயநகர் டாக்டர் நாயர் சாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது 43). இவர் கடந்த 14-ந்தேதி தனது வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு ஆசி வழங்குவதாக கூறி 2 திருநங்கைகளும், ஒரு பெண்ணும் ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றுவிட்டனர். இதுதொடர்பாக ஜெயஸ்ரீ பாண்டிபஜார் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ஜெயஸ்ரீயிடம் பணம் பறித்த காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஜெயஸ்ரீயிடம் பணம் பறித்த வழக்கில் புளியந்தோப்பு வி.எஸ்.மூர்த்திநகரை சேர்ந்த திருநங்கை வர்ஷா என்கிற விக்னேஷ்வரன் (24), வியாசர்பாடி கன்னிகாபுரம் முதல் தெருவை சேர்ந்த திருநங்கை பல்லவி என்கிற பாண்டியன் (28) மற்றும் ஆர்.கே.நகர் எழில் நகர் 2-வது தெருவை சேர்ந்த பதீஜா பானு(26) என்ற பெண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story