நாகை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
நாகை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
நாகப்பட்டினம்,
வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நேற்று முன்தினம் அதிகாலை கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து உள்ளது. ‘கஜா’ புயல் சேத பகுதிகளை பார்வையிடுவதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு புதுச்சேரி வந்தார். அன்று இரவு அங்கு தங்கிய அவர் நேற்று காலை கார் மூலம் புறப்பட்டு நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டார்.
நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கடற்கரைக்கு முதலில் மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது அவர், சேதம் அடைந்த பைபர் படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்படி உபகரணங்களை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்த மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
அப்போது அங்கு இருந்த மீனவர்கள், தரங்கம்பாடியில் மீன்பிடித்துறைமுகம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் அவர் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டார். நாகையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் வழியில் காரில் இருந்து இறங்கிய அவர், நாகை அக்கரைப்பேட்டை மீன் இறங்கு தளத்துக்கு சென்றார். அங்கு புயலால் சேதமடைந்து இருந்த மீன் இறங்கு தளத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். மேலும் புயல் காற்றால் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்த படகுகளையும் பார்வையிட்டார்.
முன்னதாக அவர், மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மு.க.ஸ்டாலினிடம், மீனவ பெண்கள் புயல் பாதிப்புகளை கூறி கதறி அழுதனர்.
பாதிப்புகளை பார்வையிட வந்த மு.க.ஸ்டாலினிடம் மீனவர்கள், 100-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்து இருப்பதாகவும், சேதம் அடைந்த படகுகளுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தினர். அதை கேட்டறிந்த ஸ்டாலின், நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
பின்னர் அங்கிருந்து வேதாரண்யம் காந்தி நகர் பகுதியில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், அங்கு உள்ள உயர்நிலை பள்ளியில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கஜா புயல் காரணமாக தமிழக அரசு எடுத்த முன்னேற்பாட்டு பணிகளை நான் நேற்று பாராட்டினேன். ஆனால் இன்று நேரில் பார்க்கும்போது சில குறைகள் உள்ளதை பார்த்தேன். இந்த குறைகளை சொல்லித்தான் ஆக வேண்டும். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை யாரும் வந்து பார்க்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் தெரிவித்தனர். புயல் சேதம் அதிக அளவில் உள்ளது. இந்த சேத விவரங்களை ஊடகங்கள்தான் தெரியப்படுத்த வேண்டும்.
கஜா புயலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story