திருவேற்காடு நகராட்சியில் குப்பைகள் சேகரிக்க 20 பேட்டரி வாகனங்கள் அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் தினமும் மக்கும், மக்காத குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று 3 சக்கர சைக்கிள்களில் சேகரித்து வருகின்றனர். பள்ளம், மேடான பகுதிகளுக்கு இந்த வாகனங்களை இயக்குவது மிகவும் சிரமமாக இருந்து வந்தது.
பூந்தமல்லி,
இதையடுத்து தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் சுமார் ரூ.20 லட்சத்தில் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய 20 மூன்று சக்கர குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வாங்கப்பட்டது. அதனை துப்புரவு பணியாளர் களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திருவேற்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேட்டரி வாகனங் களை துப்புரவு பணியாளர்களிடம் வழங்கி, அவற்றின் பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.
இந்த பேட்டரி வாகனங்கள் மூலம் துப்புரவு பணியாளர்கள் சிரமமின்றி குப்பைகளை சேகரிக்கலாம். மேலும் 75 டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு கவசம், சுத்தியல், கரண்டி உள்ளிட்ட 10 வகையான உபகரணங்களும் வழங்கப்பட்டது. இதன் மூலம் நகராட்சி பகுதிகளில் தேங்கும் குப்பைகளை விரைந்து அகற்ற முடியும். ஊழியர்கள் சில மணி நேரம் கூடுதலாக சிரமமின்றி வேலை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் நகராட்சி கமிஷனர் சித்ரா, சுகாதார ஆய்வாளர் சாமுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story