முறிந்தது முறிந்தபடி கிடக்கும் மரங்கள்; மின்கம்பங்கள் பட்டுக்கோட்டையில் இயல்பு வாழ்க்கை 3-வது நாளாக பாதிப்பு
பட்டுக்கோட்டையில் ‘கஜா’ புயல் காரணமாக நேற்று 3-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மரங்கள் முறிந்தது, முறிந்தபடி கிடக்கின்றன. சாய்ந்த மின்கம்பங்களும் அப்படியே கிடக்கின்றன. குடிநீர், பால் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லாடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
வங்கக்கடலில் உருவாகி நாகை மாவட்டம் வேதாரண்யம் வழியாக கரையை கடந்த ‘கஜா’ புயல் தஞ்சை மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், பாப்பாநாடு உள்ளிட்ட பகுதிகளை ‘கஜா’ புயல் புரட்டிப்போட்டு உள்ளது. புயல் கரையை கடந்த வேளையில் பலத்த காற்று வீசியதால் விவசாய பூமியான பட்டுக்கோட்டையில் தென்னை, மா, வாழை, வேப்ப மரங்கள், தேக்கு மரங்கள் முறிந்து விழுந்தன. நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தின் முக்கிய நகரமான பட்டுக்கோட்டையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ‘கஜா’ புயல் காரணமாக பட்டுக்கோட்டையில் இருந்து வடசேரி வழியாக மன்னார்குடிக்கு செல்லும் சாலையில் மரங்கள் முறிந்து கிடப்பதால் கடந்த 3 நாட்களாக பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பட்டுக்கோட்டை-மல்லிப்பட்டினம் இடையேயான பஸ் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை-திருச்சிற்றம்பலம் இடையே நேற்று காலை முதல் ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன.
பட்டுக்கோட்டை- மதுக்கூர் சாலையில் ஆத்திக்கோட்டையில் மரம் முறிந்து விழுந்து கிடந்ததால் கடந்த 2 நாட்களாக துண்டிக்கப்பட்டு இருந்த போக்குவரத்து நேற்று சீரானது. முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்படாததன் காரணமாக பட்டுக்கோட்டையில் இருந்து பாப்பாவெளி, பனையக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு நாட்டு சாலை வழியாக மாற்றுப்பாதையில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல பட்டுக்கோட்டை-முத்துப்பேட்டை இடையே துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை வழியாக முத்துப்பேட்டைக்கு மாற்றுப்பாதையில் பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
பல இடங்களில் கூரை வீடுகள் மீது மரங்கள் விழுந்து, பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. ஏராளமான மின்கம்பங்களும் புயலில் சிக்கி சாய்ந்து கிடக்கின்றன. பட்டுக்கோட்டையை சுற்றி உள்ள கிராம பகுதியில் சாலையின் குறுக்கும், நெடுக்குமாக மின்கம்பங்களும், மரங்களும் விழுந்து கிடப்பதை நேற்றும் காண முடிந்தது.
மரங்கள் முறிந்தது, முறிந்தபடி கிடப்பதாலும், மின்கம்பங்களை சீரமைக்காததாலும், பட்டுக்கோட்டை நகர பகுதி, கிராம பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது. பட்டுக்கோட்டையில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. செல்போன் கோபுரங்கள் சரிந்து கிடப்பதால் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விட்டது. அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று 3-வது நாளாக பாதிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை காரணமாக பட்டுக்கோட்டை-தஞ்சை மெயின் சாலையில் மரங்கள் அகற்றப்பட்டன. பட்டுக்கோட்டையில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் சாலையில் மரங்கள் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை.
கிழக்கு தொண்டராம்பட்டு, கண்ணுகுடி கிழக்கு, திட்டக்குடி, செண்டாங்காடு, சூரப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் மின் கம்பங்கள் சீரமைக்கப்படாததால் இயல்பு நிலை திரும்புவதில் தாமதம் நீடிக்கிறது. இப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க பட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிள்களில் செல்ல வேண்டி உள்ளது. மோட்டார் சைக்கிள் இல்லாதவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
பாப்பாநாட்டில் இருந்து மதுக்கூர் செல்லும் சாலையில் விழுந்த மின்கம்பங்கள் நேற்று வரை சீரமைக்கப்படவில்லை. இதனால் நேற்று அந்த வழியாக செல்ல முடியாமல் மினி வேன்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதை பார்த்த அப்பகுதி வாலிபர்கள் மற்றும் டிரைவர்கள் மின் கம்பிகளை கம்பங்களில் இருந்து துண்டித்து பாதையை சரி செய்தனர். அதன் பிறகு வாகனங்கள் சென்றன.
திட்டக்குடி வயல் பகுதியில் நேற்று டிரான்ஸ்பார்மர்கள் பல விழுந்து கிடந்ததை பார்க்க முடிந்தது. கிழக்கு தொண்டராம்பட்டு கிராமத்தில் அதிகளவு மின்கம்பங்கள் சாய்ந்து கிடந்தன. பட்டுக்கோட்டை மெயின் சாலையில் தெருக்களுக்கு செல்லும் குறுக்கு சாலைகளில் விழுந்த மரங்கள் இதுவரை அகற்றப்படவில்லை.
பட்டுக்கோட்டை நகர பகுதியில் கண்டியன் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் விழுந்த மரங்கள் நேற்று வரை அகற்றப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோர் மாணவர் நல விடுதி வளாகத்திலும் மரங்கள் அகற்றப்படவில்லை. விடுதி மூடப்பட்டுள்ளது.
மேல தொண்டராம்பட்டு அருகே வயலில் தண்ணீர் தேங்கி உள்ளது. கிராம பகுதிகளில் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
மின்வினியோகம் இல்லாததால் தஞ்சை, பட்டுக்கோட்டை பகுதிகளில் குடிப்பதற்கும், வீட்டு உபயோகத்துக்கும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வீதிகளில் பெண்கள், சிறுவர்கள் குடங்களை தூக்கிக்கொண்டு குடிநீருக்காக அல்லாடியதை காண முடிந்தது. குடிநீருக்காக பொதுமக்கள் அங்கும், இங்கும் அலைந்து திரிந்தனர்.
இதை பார்த்த சிலர் தங்களிடம் இருந்த ஜெனரேட்டர் உதவியுடன் மின் மோட்டாரை இயக்கி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்தனர். பட்டுக்கோட்டை பள்ளி வாசல் தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜெனரேட்டர் மூலம் மின் மோட்டார் இயக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இங்கு பள்ளி வாசல் தெரு, தங்கவேல் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து குடங்களில் குடிநீர் பிடித்து சென்றனர்.
அதேபோல முத்துப்பேட்டை சாலை நாடியம்மாள்புரம் வாய்க்கால் கரையில் உள்ள ஒரு டீக்கடை, 2 வணிக வளாகங்கள், தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள வணிக நிறுவனங்களில் ஜெனரேட்டர் உதவியுடன் மின் மோட்டார் இயக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் பகுதியில் பொதுமக்கள் வீட்டு உபயோகத்துக்கு தேவையான தண்ணீரை ஆறுகள், குளங்களில் இருந்து பிடித்து சென்றனர். பலர் மோட்டார்சைக்கிள்கள், சரக்கு ஆட்டோக்களில் பாத்திரங்களுடன் வந்து தண்ணீர் எடுத்து சென்றனர். பட்டுக்கோட்டை பகுதியில் ஆறுகள், குளங்களில் குளிப்பதற்கு கூட்டம் அலைமோதியது.
குடிநீரைப்போல பாலுக்கும் பொதுமக்கள் போராட வேண்டி உள்ளது. புயல் காரணமாக பட்டுக்கோட்டை பகுதிக்கு கடந்த 2 நாட்களாக பாக்கெட் பால் வரத்து இல்லை. மின்சாரம் இல்லாமல் குளிர்சாதன பெட்டிகள் செயலிழந்து கிடப்பதால் வியாபாரிகளும் பாலை வாங்கி விற்க தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை-முத்துப்பேட்டை சாலையில் டீக்கடை வைத்திருப்பவர் கோபாலகிருஷ்ணன். இவர் பசும் பால் வியாபாரமும் செய்து வருகிறார்.
பால் தட்டுப்பாடு இருப்பதை உணர்ந்த அவர், கடந்த 2 நாட்களாக டீக்கடையை மூடிவிட்டு பால் விற்பனையை மட்டும் செய்து வருகிறார். இவரிடம் பால் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். இதையடுத்து அவர் டோக்கன் முறையை அமல்படுத்தி, பொதுமக்களின் சிரமத்தை போக்கி உள்ளார். இவருடைய கடையில் பொதுமக்கள் தங்கள் பாத்திரங்களில் டோக்கனை போட்டு வைத்து விட்டு சென்று, பின்னர் வந்து பாலை எடுத்து செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அதேபோல கிராமங்களை சேர்ந்த பலர் நகர பகுதிக்கு வந்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். போக்குவரத்து மற்றும் மின்சார வினியோகம் சீரான பிறகே பட்டுக்கோட்டை பகுதியில் பால் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story