புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை: பொதுமக்களின் ஒத்துழைப்பால் அதிக சேதம் தவிர்க்கப்பட்டது - கலெக்டர் பேட்டி
புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை, பொதுமக்களின் ஒத்துழைப்பால் அதிக சேதம் தவிர்க்கப்பட்டதாக கலெக்டர் கூறினார்.
கடலூர்,
புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை, பொதுமக்களின் ஒத்துழைப்பால் அதிக சேதம் தவிர்க்கப்பட்டதாக கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.
இது பற்றி கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கூறியதாவது:-
‘கஜா’ புயல் நேற்று முன்தினம் நாகைக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தபோது கடலூரில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயல் கரையை கடக்கும் போது கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் படகுகளை பாதுகாப்பாக கடற்கரையில் நிறுத்தி வைக்குமாறு மீனவர்களிடம் அறிவுறுத்தி இருந்தோம்.
பெரிய படகுகள் ஒன்றோடொன்று மோதி உடைந்து விடாமல் இருப்பதற்காக அவற்றை ஒன்றுடன் ஒன்று கட்டி வைக்குமாறு கூறியிருந்தோம். இதனால் படகுகள் சேதம் அடையவில்லை. அதேப்போல் வலைகளை படகில் இருந்து எடுத்துக்கொண்டு வந்த வலைக்கூடத்தில் வைக்குமாறு அறிவுறுத்தினோம். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.
கடலூர் மாவட்ட மக்கள் ஏற்கனவே பல இயற்கை பேரிடர்களை சந்தித்தவர்கள். இதனால் பேரிடர் சமயங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நன்றாக அறிந்து உள்ளனர். காற்றின் வேகம் அதிகமாக இல்லாததாலும், மாவட்ட நிர்வாகம் போதிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததாலும், மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது விடுத்த வேண்டுகோளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்ததாலும் கடலூர் மாவட்டம் தப்பியது. புயலின்போது சாலையில் விழுந்த மரங்களை உடனுக்குடன் காவல்துறையினர் அப்புறப்படுத்தினார்கள். மாவட்ட நிர்வாகத்துக்கு காவல் துறையினரின் ஒத்துழைப்பு நன்றாக இருந்தது.
இவ்வாறு கலெக்டர் அன்பு செல்வன் கூறினார்.

Related Tags :
Next Story