கத்தியைக் காட்டி மிரட்டி லாரி அதிபரிடம் பணம், செல்போன் பறிப்பு; 2 வாலிபர்கள் கைது


கத்தியைக் காட்டி மிரட்டி லாரி அதிபரிடம் பணம், செல்போன் பறிப்பு; 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 17 Nov 2018 11:58 PM GMT (Updated: 17 Nov 2018 11:58 PM GMT)

கொம்பாக்கத்தில் லாரி அதிபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், செல்போன் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

வில்லியனூர்,

வில்லியனூரை அடுத்த கொம்பாக்கம்பேட் புதுநகரை சேர்ந்தவர் ரத்தினவேலு (வயது 56), சொந்தமாக லாரி வாங்கி ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் லாரியை மேட்டுப்பாளையம் லாரி நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

கொம்பாக்கம் கல்லறை ரோட்டில் அவர் சென்றபோது 3 வாலிபர்கள் ரத்தினவேலுவை வழிமறித்தனர். அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் அவர்கள் 3 பேரும் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரத்தினவேலுவின் கழுத்தில் வைத்து அவரிடமுள்ள பணத்தை தரும்படி கேட்டு மிரட்டினர்.

பின்னர் ரத்தினவேலு சட்டைப் பையில் வைத்திருந்த 6 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்சி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து அவர் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உடனடியாக விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் கத்தியைக்காட்டி மிரட்டி ரத்தினவேலுவிடம் பணம், செல்போனை பறித்தது வில்லியனூர் நடராஜன் நகரை சேர்ந்த பாலா என்ற பாலாஜி (வயது 19), திலீப்குமார் (22) மற்றும் வி.மணவெளியை சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரிய வந்தது.

விசாரணையைத் தொடர்ந்து வாலிபர்கள் பாலாஜி மற்றும் திலீப்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். புருஷோத்தமனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கைதான பாலாஜி மற்றும் திலீப்குமார் ஆகியோர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story