முருகம்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்; தொற்றுநோய் பரவும் அபாயம்


முருகம்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்; தொற்றுநோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 19 Nov 2018 4:00 AM IST (Updated: 19 Nov 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

முருகம்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக திருப்பூர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதுபோல் திருப்பூர் முருகம்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் இந்த மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்து கொண்டிருக்கிறார்கள். தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளதால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மேலும், வி‌ஷ ஜந்துகள் நடமாட்டமும் அந்த பகுதியில் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–

எங்கள் பகுதியில் மழைநீர் வடிந்து செல்லாமல் தேங்கியுள்ளது. இதனால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே எங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்காமல் செல்வதற்கு ஏதுவாக வடிகால் வசதி செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story