மாவட்டத்தில் கஜா புயலால் 116 வீடுகள் சேதம் 26 எக்டேரில் பயிர்கள் நாசம்


மாவட்டத்தில் கஜா புயலால் 116 வீடுகள் சேதம் 26 எக்டேரில் பயிர்கள் நாசம்
x
தினத்தந்தி 19 Nov 2018 4:00 AM IST (Updated: 19 Nov 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் கஜா புயலால் 116 வீடுகள் சேதமடைந்தன. 26 எக்டேரில் விளைந்த பயிர்கள் நாசமடைந்தன.

சிவகங்கை,

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை தாக்கிய கஜா புயலால் சிவகங்கை மாவட்டமும் பாதிக்கப்பட்டது. சிவகங்கையில் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் நெடுஞ்சாலைத்துமுறை ஊழியர் முத்துமுருகன், நெற்குப்பையில் மரம் சாய்ந்து விழுந்ததில் துப்புரவு பணியாளர் எலிசபெத்ராணி ஆகியோர் பலியானார்கள். இது தவிர 2 மாடுகள், 6 ஆடுகள் இறந்தன.

மாவட்டத்தில் குடிசைகள் உள்பட 116 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் வாழை, பப்பாளி, மா, காய்கறிகள், சம்மங்கி பூ என 26 எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாயின.

மேலும் 527 மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்து விழுந்தன. 3 பாலங்கள் பலத்த சேதமடைந்தன. 280 மரங்கள் முறிந்தும், வேருடன் சாய்ந்தும் விழுந்துள்ளன. கஜா புயலால் பலத்த பாதிப்படைந்த பகுதிகளில் இருந்து 90 குழந்தைகள், 125 பெண்கள் உட்பட 293 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுதவிர மாவட்டத்தில் வேறு ஏதேனும் சேதம் ஏதேனும் ஏற்பட்டு உள்ளதா என்று அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.


Next Story