இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு


இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 19 Nov 2018 4:30 AM IST (Updated: 19 Nov 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர்.

ராமேசுவரம்,

கஜா புயலை தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். புயல் கரையை கடந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து 491 படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது குட்டி ரோந்து கப்பல்களில் 30–க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர் அந்த பகுதியில் ரோந்து வந்துள்ளனர். அவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக படகுகளை கண்டதும் அந்த பகுதியில் இருந்து செல்லுமாறு எச்சரிக்கை செய்துள்ளனர்.

இதையடுத்து கடலில் வீசப்பட்டு இருந்த வலைகளை மீனவர்கள் எடுத்தபோது 30–க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் படகுகளில் இறங்கி மீனவர்களை தாக்கி வலைகளை அறுத்து எறிந்தனர். மேலும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி கடலில் வீசி விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து மீனவர்கள் மீன்பிடிப்பை பாதியிலேயே கைவிட்டு கரைதிரும்பினர்.

இலங்கை கடற்படை தாக்குதல் தொடர்ந்து வருவது மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story