‘கஜா’ புயலால் சேதமான படகுகள் கணக்கெடுப்பு; மாவட்ட மீன்வளத்துறை நடவடிக்கை
முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவை தொடர்ந்து கஜா புயலில் சேதமான படகுகள் குறித்து கணக்கெடுக்கும் பணியை மாவட்ட மீன்வளத் துறை தொடங்கியுள்ளது.
காரைக்கால்,
கஜா புயல் கரையை கடந்தபோது வீசிய சூறைக்காற்றில் சிக்கி காரைக்கால் மாவட்டத்தில் ஏராளமான மீனவர்களின் படகுகள் சேதமடைந்தன. இந்த நிலையில் கஜா புயல் பாதிப்பை பார்வையிட வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி சேதமான மீனவர்கள் படகுகள் மற்றும் இதர சேதங்களை உடனே கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார்.
முதல்-அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் கவியரசன் தலைமையில், கஜா புயலில் சேதமான படகுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை அதிகாரிகள் புயலால் சேதமடைந்த விசைப்படகுகள், பைபர் படகுகள் என தனித்தனியே கணக்கெடுத்து வருகின்றனர். முழுமையாக கணக்கெடுக்கப்பட்ட பின்னர் அது குறித்த விவரங்கள் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் முதல்கட்டமாக பைபர் படகுகள் மட்டும் சுமார் 160 படகுகள் சேதமானதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 11 கடலோர மீனவ கிராம மக்கள், தங்கள் விசைப்படகுகளை மீன்பிடி துறைமுகம் மற்றும் அரசலாற்றங்கரையிலும், பைபர் படகுகளை அரசலாற்றின் கரை ஓரத்தில் உள்ள ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் நிறுத்தி வைத்துள்ளனர். கஜா புயல் காரணமாக படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியும், கவிழ்ந்தும், பல நூறு மீட்டர் இழுத்துச்செல்லப்பட்டும், ஒரு சில படகுகள் கட்டி வைக்கப்பட்டிருந்த கயிறுகள் அறுந்ததால் இழுத்துச்செல்லப்பட்டு ரெயில்வே பாலம், துறைமுகம் ஓரம் மோதி சேதமாகியுள்ளன.
இந்த விவரங்களையெல்லாம் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீனவர்களிடம் கேட்டறிந்து கணக்கெடுத்து முழுமையாக நிவாரணம் கிடைக்கும் வகையில் உதவவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Tags :
Next Story