ஹெல்மெட் அணியாமல் செல்வதால்தான் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது - கவர்னர் கிரண்பெடி வேதனை
ஹெல்மெட் அணியாமல் செல்வதால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்று கவர்னர் கிரண்பெடி வேதனையுடன் தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுவையில் போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்துவது தொடர்பாக கவர்னர் கிரண்பெடி போலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா, உள்துறை கூடுதல் செயலாளர் சுந்தரேசன், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி ஆலோசனைகள் கூறி, பேசியதாவது:-
அனைத்து காவல்நிலைய அதிகாரிகளும் ரோந்து செல்லும்போது செல்லான் புத்தகத்தை வைத்திருக்கவேண்டும். யாராவது போக்குவரத்து விதிகளை மீறி சென்றால் அதை செல்போன்களில் படம் பிடிக்கவேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உடனடியாக அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கவேண்டும்.
அவர்கள் கையில் பணம் இல்லை என்று கூறினால் நோட்டீசு கொடுத்து நீதிமன்றத்தில் கட்ட செய்யவேண்டும். அபராதம் குறித்த தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யவேண்டும். மேலும் அதை போக்குவரத்து துறைக்கு அனுப்பவேண்டும். அவ்வாறு செய்தால்தான் அந்த நபர்கள் முன்பு ஏதேனும் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது தெரியவரும்.
ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் 2 சக்கர வாகனங்களில் 3 பேர் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். 2 சக்கர வாகனங்கள் ஓட்டும்போது ஹெல்மெட் அணியும் பழக்கத்தை மக்களிடையே உருவாக்கவேண்டும். ஏனெனில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும்போதுதான் அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
வாகனம் நிறுத்த அனுமதியில்லாத இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும். அனைத்து அபராத தொகைகளும் சாலை பாதுகாப்பு நிதிக்குத்தான் போய் சேருகிறது.
இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.

Related Tags :
Next Story