முல்லைப்பெரியாறு நீர்மின் நிலையத்தில்: மின் உற்பத்தி 42 மெகாவாட்டாக குறைந்தது


முல்லைப்பெரியாறு நீர்மின் நிலையத்தில்: மின் உற்பத்தி 42 மெகாவாட்டாக குறைந்தது
x
தினத்தந்தி 20 Nov 2018 3:30 AM IST (Updated: 20 Nov 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி 42 மெகாவாட்டாக குறைந்தது.

கூடலூர், 

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இத்தண்ணீர் மூலம் லோயர்கேம்பிலுள்ள முல்லைப்பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 140 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 17-ந்தேதி முதல் தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 450 கனஅடியாக குறைக்கப்பட்டது.

இதனால், மின் உற்பத்தி 42 மெகாவாட்டாக குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 721 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்இருப்பு 4 ஆயிரத்து 396 மில்லியன் கன அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 65.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,314 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 860 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்இருப்பு 4 ஆயிரத்து 731 மில்லியன் கனஅடியாக உள்ளது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.60 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 165 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 165 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்இருப்பு 100.55 மில்லியன் கனஅடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 361 கனஅடியாக உள்ளது. இந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்இருப்பு 435.32 மில்லியன் கனஅடியாக உள்ளது. முல்லைப்பெரியாறு பகுதியில் 2.6 மி.மீ., தேக்கடியில் 2மி.மீ., கூடலூரில் 1.5மி.மீ., பாளையத்தில் 1.8மி.மீ., வைகை அணையில் 3மி.மீ. மழை அளவு பதிவாகியிருந்தது.

Next Story