வெள்ளகோவில் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காவலாளி போக்சோ சட்டத்தில் கைது
வெள்ளகோவில் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவன காவலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
காங்கேயம்,
வெள்ளகோவில் கே.வி.பழனிச்சாமி நகரை சேர்ந்தவர் மாதவன் (வயது 54). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை தின்பண்டம் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று முறுக்கு வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. உடனே சிறுமி அலறிக்கொண்டு ஓடி வந்தார்.இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இதுகுறித்து சிறுமியின் தந்தை காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாதவன் மீது தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாதவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது.
இதனையடுத்து மகளிர் போலீசார் மாதவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.