உயர்மின் அழுத்த ஒயர் அறுந்து விபத்து: வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்


உயர்மின் அழுத்த ஒயர் அறுந்து விபத்து: வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 20 Nov 2018 4:00 AM IST (Updated: 20 Nov 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே உயர்மின் அழுத்த ஒயர் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பல வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.

ஸ்பிக்நகர், 

தூத்துக்குடி அருகே உள்ள தெர்மல்நகர் கேம்ப்-2 பகுதியில் துணை மின் நிலையம் உள்ளது.

இங்கு இருந்து உயர் அழுந்த மின்கம்பிகள் மின்கோபுரங்களுக்கு முத்தையாபுரம் அய்யன்கோவில் தெரு, திருமாஞ்சி நகரின் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அய்யன்கோவில் தெரு, திருமாஞ்சி நகர் பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று மதியம் துணைமின் நிலையத்தில் இருந்து மின் கோபுரங்களுக்கு சென்ற உயர் அழுத்த மின்கம்பி அறுந்து, அய்யன்கோவில் தெரு, திருமாஞ்சி நகர் பகுதிகளில் வீடுகளுக்கு இணைக்கப்பட்ட மின்ஒயர்கள் மீது விழுந்தது.

இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் தீ பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி வீடுகளில் இயங்கி கொண்டு இருந்த டி.வி. உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பல சேதம் அடைந்தன.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும் போது, மின்வாரியத்துறை சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு பணிகளும் நடைபெறாததே இந்த விபத்துக்கு காரணம். இனிவரும் காலங்களில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். எங்கள் பகுதிக்கு விரைவில் மின்சாரம் சரிசெய்யப்பட வேண்டும் என்று கூறினர்.

Next Story